சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் ‘புனித புஹாரி செரீப்’ பாராயணம் தமாம் செய்து வைப்பு
சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் பாரம்பரியமாக ஓதப்பட்டு வந்த ‘புனித புஹாரி செரீப்’ பாராயணம் இம்முறையும் ஓதப்பட்டு இன்று (20) செவ்வாய்க்கிழமை மாலை இப்பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம்.ஐ.ஆதம்பாவா (ரஷாதி) மற்றும் உலமாக்களினால் தமாம் செய்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதிச் செயலாளர் ஏ.எச்.எம். ஹாரூன், பொருளாளர் ஏ.எம்.சமீம், மற்றும் உலமாக்கள், வர்த்தகர்கள், நிர்வாகிகள், ஜமாஅத்தினர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
புனித புஹாரி செரீப் பாராயணம், கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, சுமார் ஒரு மாத காலமாக அதிகாலை வேளையில் ஓதப்பட்டும் இரவு இஷாத் தொழுகையின் பின்னர் பயான் நிகழ்வும் இடம்பெற்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது.




(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
