திகாமடுல்ல மீடியா போரத்தின் புதுவருட ஒன்று கூடலும் அங்கத்தவர்களுக்கு, பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும், ஒலுவில் வில்லாஹ் ஹோட்டலில் இடம்பெற்றது..!
திகாமடுல்ல மீடியா போரத்தின் பிரதித் தலைவரும் கல்முனை கல்வி வலய தமிழ்மொழி ஆசிரிய ஆலோசகருமான ஜெஸ்மி எம் மூஸாவின் நெறிப்படுத்தலின் கீழ் போரத்தின் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எப். றிபாஸ் (ஜேபி),தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், தொழிலதிபருமான அப்துல் வாஸீத், சிரேஷ்ட ஒலி, ஒளி பரப்பாளர் சட்டத்தரணி ஏ.எம். தாஜ் உட்பட போரத்தில் புதிதாக இணைந்து கொண்ட வானொலி, தொலைக்காட்சி(இலத்திரனியல்)ஊடக நிறுவனங்களினதும், பிராந்திய, ஓய்வு நிலை மூத்த ஊடகவியலாளர்கள் என பெரும் என்னிக்கையானோர் கலந்து கொண்டனர்.




