விளையாட்டு

மருதானை பிரிமியர் லீக் – 2026 வெற்றிக் கிண்ண அறிமுகமும் பிரமுகர்கள் கௌரவிக்கும் நிகழ்வும்..! 21ம் திகதி நடைபெறும்..!

பேருவளை மருதானை பிரிமியர் லீக் – 2026 வெற்றிக் கிண்ணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கிரிகட் சுற்றுப் போட்டியின் வெற்றிக்கிண்ண அறிமுக நிகழ்வும் மருதானைப் பகுதியைச் சேர்ந்த வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளை கௌரவிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 21ம் திகதி புதன் கிழமை (21.01.2026) பி.ப. 2.00 மணிக்கு பேருவளை காலி வீதியிலுள்ள ஸிமிச் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பேருவளை நகரபிதா மபாஸிம் அஸாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொள்வார். மேலும் பல அதிதிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றுவர்.

இச்சுற்றுப் போட்டி எதிர்வரும் 27ம் திகதி பேருவளை மாளிகாஹேன ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) விளையாட்டரங்கில் மின் ஒளியில் நடாத்தப்படவுள்ளது.

பேருவளை மருதானைப் பகுதியைச் சேர்ந்த 32 கிரிக்கட் அணிகள் இந்த மாபெரும் சுற்றுப் போட்டியில் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது. அணிக்கு 11 பேர் கொண்ட இச்சுற்றுப் போட்டி ஐந்து ஓவர்களைக் கொண்டதாகும்.

இறுதிப் போட்டி பெப்ரவரி மாதம் 01ம் திகதி நடைபெறவுள்ளதோடு பல முக்கிய அதிதிகள் பரிசளிப்பு நிகழ்வில் பங்குபற்றுவர். இதற்கான ஏற்பாடுகளை பிரிமியர் லீக் 2026 குழு மேற்கொண்டு வருகிறது.

(பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *