நிந்தவூரில் சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார தொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கல்..!
தச்சன், தையல் தொழில் செய்வோர் மற்றும் பயிர்செய்கை செய்யும் சமூர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (19) திங்கட்கிழமை நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்த உபகரணங்களை வழங்கி வைத்தார்.
1.5 மில்லியன் ரூபா அரசின் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில், நிந்தவூர் பிரதேச செயலாளர் அப்துல் லத்தீப், உப பிரதேச செயலாளர், சமூர்த்தி தலைமை பீடம், அதன் உத்தியோகத்தர்கள்,
பிரதேச சபை உறுப்பினர்களான சம்சுன் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)






