சிறப்பாக நடைபெற்ற “அத்தீன் – ஹதீஸ் ஜிப்ரில் விளக்கம்” நூல் வெளியீடு..!
கொழும்பு இத்திஹாத் அஹ்லிஸ்ஸுன்னதி அமைப்பால் அரபுக் கல்லூரி உயர் வகுப்பு மாணவர்களுக்கு நடாத்திய கல்விக் கருத்தரங்குகளின் அரபு மொழி கையேடுகளின் தமிழாக்க நூல் ஞாயிற்றுக்கிழமை (2026-01-18) மாலை கொழும்பு அக்ரபோல் உணவக மண்டபத்தில் இத்திஹாத் அஹ்லிஸ் ஸுன்னதியின் தலைவர் டாக்டர் பஹ்மி இஸ்மாயீலீன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் காலி அலிய்யா அரபுக் கல்லூரி பணிப்பாளர் கலீபதுல் குலபா மெளலவி ஸஹூர் (பாரி), அஸ்ஸெய்யித் பலாஹ் ஹபஷி மெளலானா, கலீபதுஷ் ஷாதுலிகளான மெளலவி இஸ்திகார் (பாரி), மெளலவி பஸ்லான் (அஷ்ரபி – பீ. ஏ ), மெளலவி அஹ்மத் ஸூபி (மஹ்ழரி), மற்றும் மெளலவி அல்ஹாஜ் சில்மி (நூரி – பீ ஏ), மெளலவி அஸ்மீர் (ஹஸனி), மெளலவி ஹாபில்தீன் (பாரி), மெளலவி அப்துல் காதர் (ரவ்ழி) உட்பட இன்னும் பல உஸ்தாத்மார்களும், இத்திஹாத் அஹ்லஸ் ஸுன்னதியின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அரபு மொழியில் வழங்கப்பட்ட 10 கையேடுகளின் தமிழாக்கத்தை பன்னூலாசிரியரும் ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீட அதிபருமான மெளலவி அஸ்மிகான் அலியார் (முஅய்யிதி) செய்திருந்தார்.
நடைபெற்ற இந்நிகழ்வில் மெளலவி அஹ்மத் ஷாஹ் (ஜமாலி) நூல் ஆய்வுரை வழங்கினார். அதில் அவர் தொடர்ந்து கூறியதாவது :
இந்நூல் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்க வேண்டிய நூலாகும். இதன் மூலம் நேரான பாதையை ஒவ்வொருவருக்கும் விளங்கிக்கொள்ள முடியும். இதை சிங்கள, ஆங்கில மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவது காலத்தின் தேவையாகும்.
காலி அலிய்யா அரபுக் கல்லூரி பணிப்பாளர் கலீபதுல் குலபா மெளலவி அல்ஹாஜ் முஹம்மத் ஸுஹூர் (பாரி) சிறப்புரையாற்றியதோடு, அல் உஸ்தாத் அஸ்மிகான் (முஅய்யிதி) இத்திஹாத் அஹ்லிஸ் ஸுன்னாவின் கடந்த கால சேவைகளும், எதிர்கால திட்டங்களும் எனும் தலைப்பில் உரையாற்றினார்.
இறுதியாக கலீபதுஷ் ஷாதுலி மெளலவி இஸ்திகார் (பாரி)யின் துஆ பிரார்த்தனையோடு நிறைவுபெற்றது.
(பேருவலை பீ எம் முக்தார்)












