கண்டி கலஹா பகுதியில் பெறுமதி மிக்க மாணிக்க கற்பாறை..?
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கள்ளந்தன்னை தோட்ட ஆலயப்பகுதியில் உள்ள பாராங்கல் ஒன்றில் பெறுமதி மிக்க நீல மாணிக்கம் ஒட்டி இருப்பதாக பெரும் பரபரப்பு காணப்படுகின்றது.
இதனையடுத்து இந்த கல் இருக்கும் இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டிட்வா புயலினால் மண் சரிவு ஏற்பட்டபோது உருண்டு வந்த ஒரு கற்பாறையிலேயே இந்த அதிசய மாணிக்கம் தென்படுகிறது..
பேராதனை பல்கலைக்கழக புவியியல் ஆராய்ச்சிப் பிரிவு இதனை உறுதி செய்வதற்கான ஆய்வு நடவடிக்கைளுக்காக நாளை (20) கலஹா ஆலயப் பகுதிக்கு செல்லவிருக்கிறது.
(ரஷீத் எம். றியாழ்)
