உக்குவளை அஜ்மீரில் அடிக்கல் நடும் நிகழ்வு
உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலைக்கான நுளைவாயில் முகப்புடன் கூடிய சுற்றுமதில் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமையன்று இப்பாடசாலை அதிபர் எச் எம். சாதாத் தலைமையில் நடைபெற்றது
சகோதரர்களான அர்க்கம் அலி அஸ்கர் அலி ஆகியோர் இணைந்த குடும்பத்தார் காலஞ்சென்ற தமது தந்தை பரகஹவெல
அக்றம் என்பவரது நினைவாக சுமார் 26 இலட்சம் நிதிசெலவில் இப்பணி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்நிகழ்வில் இப்பாடசாலை பழைய மற்றும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுடன் ஆசிரியர் ஆசிரியைகள் நலன்விரும்பிகள் முன்னாள் அதிபர்கள் உக்குவளை பிரதேச சபை தலைவர் நிமல் கருனாதிலக்க உதவித் தலைவர் எம். ராபி ஆகியோர் கலந்துகொண்டனர்.



உக்குவளை நிருபர்
