ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் இருதய வடிகுழாய் ஆய்வுக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு கடற்படையினரால் அடிக்கல் நாட்டப்பட்டது..!
கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக, கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தம்பதியினரின் நிதி பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் இருதய வடிகுழாய் ஆய்வக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான வியாழக்கிழமை (15) அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும், தெற்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி கொமடோர் அருண வீரசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சிறப்பு மருத்துவர் அசேல குணவர்தன, ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் கடற்படையினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

