ரி20 உலகக் கிண்ணம்; பங்களாதேஷா? ஸ்கொட்லாந்தா? இறுதி முடிவு நாளை மறுதினம்
2026 ஐசிசி ரி20 உலகக் கிண்ண தொடரில் பங்களாதேஷ் பங்கேற்பதா இல்லையா என்பதற்கான இறுதி முடிவை ஜனவரி 21க்குள் ஐசிசி எடுக்க உள்ளது. இதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) உடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த போட்டித் தொடர் இந்தியாவில் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள நிலையில் பங்களாதேஷ் அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் இடம்பெற உள்ளதால், இரு நாட்டுக்கும் இடையில் தற்சமயம் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமையால் பங்களாதேஷ் அணி இந்தியாவுக்கு பயணம் செய்யுமா இல்லையா என்பது குறித்து ஒரு முடிவு அவசியம் என ஐசிசி, BCB-க்கு தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் அணி இந்தியாவுக்கு அனுப்பப்படாது என்று BCB முடிவு செய்தால், அந்த அணிக்கு பதிலாக வேறொரு அணியை ஐசிசி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய ஐசிசி தரவரிசைப்படி, ஸ்காட்லாந்து அணி மாற்று அணியாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த விவகாரம் தற்போது விவாத நிலையில் தொடர்கிறது.
ஜனவரி 21 இறுதி திகதிக்கு முன் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் இறுதி நிலைப்பாட்டை ஐசிசி எதிர்பார்த்து காத்திருக்கிறது.
(அரபாத் பஹர்தீன்)
