களுத்துரை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னனிகள் சம்மேளனத்தின் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்
களுத்துரை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னனிகள் சம்மேளனத்தின் விஷேட கூட்டம் தர்ஹா நகர் மொஹம்மத் ஜஸ்லியின் இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் அல்ஹாஜ் தாஹிர் பாஸி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னால் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னனியின் இரண்டாவது உப தலைவர் பெளஸர் பாரூக் உட்பட பல முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
எதிர்கால வேலைத் திட்டங்கள் பற்றியும் வருடாந்த மாநாடு மற்றும் இளைஞர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு நடாத்துவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
களுத்துரை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, பெளதீக வள பற்றாக்குறை தொடர்பாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூஸுபை சந்தித்து கலந்துரையாடவும் தீர்மானிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
செயலாளர் ஷம்ஸுல் மக்கி இறுதியில் நன்றியுரை நிகழ்த்தினார்.



(பேருவளை பீ எம் முக்தார்)
