இலங்கை வந்தது இங்கிலாந்து
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) மற்றும் 3 போட்டிகள் கொண்ட ரி20 (T20I) தொடர்களில் பங்கேற்க இன்று காலை இலங்கை வந்தடைந்தது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான தொடரில் முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இடம்பெறவுள்ளது. இப் போட்டிகள் ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவுப் போட்டிகளாக இடம்பெறவுள்ளது. இதன் முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
மேலும் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இத் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணி இன்று (19) இலங்கை வந்தடைந்தது அவ் அணிக்கு இன்று பலத்த வரவேற்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
