அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் அஸாம் பளீல்
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் புயல் மற்றும் மண் சரிவு அனர்த்த நிலமைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக களத்தில் இறங்கி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்ட நாட்டிலுள்ள சர்வமத அமைப்புகள் சமூக நல இயக்கங்கள் உலக நாடுகளின் தலைவர்கள் வெளிநாட்டு தூதுவர்கள் இன,மத, மொழி பிரதேசம் பாராது பல கோடி ரூபா பணத்தையும் நிவாரண பொருட்களையும் அள்ளி வழங்கிய நாட்டு மக்களுக்கும் நன்றி கூற வேண்டும் என பேருவளை நகர சபை எதிர் கட்சி தலைவர் அல்-ஹாஜ் அஸாம் பளீல் தெரிவித்துள்ளார்.
பேருவளை நகர சபையின் மாதாந்தக் கூட்டம் நகர பிதா மபாஸிம் அஸாஹிர் தலைமையில் நடைபெற்ற போது விசேட உரையொன்றையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அஸாம் பளீல் மேலும் கூறியுள்ளதாவது இயற்கை அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கம்பளை,கெலி ஓயா,மல்வானை,கொலன்னாவ உட்பட மேலும் பல பகுதிகளுக்கு காதிரியத்துன் நபவிய்யா அமைப்பு சீனன்கோட்டை பள்ளிச் சங்க அனர்த்த முகாமத்துவ கமிட்டி, பள்ளி வாசள் கமிட்டிகள்,சமூக நள அமைப்புகள் உட்பட பேருவளை பகுதி வாழ் மக்கள் தாராள மனதுடன் உதவிக்கரம் நீட்டினர் நிவாரண பொருட்களை திரட்டி அனுப்பியதோடு பல கோடி ரூபா நிதியை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச்சென்று கையளித்தனர் அதற்காக நன்றி கூற வேண்டும்.
காதிரியத்துன் நபவிய்யாத் தரிக்காவின் ஆன்மீகத் தலைவர் சங்கைக்குரிய நாயகம் அஷ் செய்ஹ் அஹம்மத் பின் முஹம்மத் ஆலிம் காதிரியதுன் நபவி அவர்களின் வழிகாட்டலின் கீழ் நவவிய்யா இளைஞர் அமைப்பும் நபவிய்யா முரீதீன்களும் உடனடியாக மல்வானை,கொலன்னாவை,கெலி ஓயா மற்றும் கம்பளை பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்து கொடுத்து நிவாரண உதவிகளையும் சேகரித்து வழங்கினார்கள் அதற்கு விசேடமாக நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
நகர சபையின் சுயேட்சை அணியின் வழிகாட்டி எனது சகோதரர் முன்னாள் எம்.பி மர்ஜான் பளீல் கம்பளையில் கல்வி கற்றவர் இப் பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன் அவரும் அம்மக்களுக்கு கை கொடுத்து அவர்களை மீட்க வேண்டும் என உடனடியாகவே செயலில் இறங்கினார் அதே போல் சினன்கோட்டை பள்ளிச் சங்கமும் உடனடியாக செயலில் இறங்கி பல கோடி ரூபாய் பணத்தையும் பல கோடி ரூபாய் நிவாரண பொருட்களையும் சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியமைக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன,மத,மொழி பேதமின்றி உதவி செய்து இன நல்லிணக்கத்தையும் மனிதாபிமானத்தையும் முழு நாட்டு மக்களும் வெளிக்காட்டினர்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)
