முஸ்லிம் திணைக்கள ஏற்பாட்டில் மள்வானையில் நடைபெற்ற மிஃராஜ் தின நிகழ்வு
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்று ( 17) சனிக்கிழமை இரவு இஷா தொழுகையின் பின்னர் தேசிய மிஹ்ராஜ் தினம் மள்வானை ரக்ஷாபான ஜூம்ஆப் பள்ளிவாசலில் முஸ்லிம சமய கலாச்சாரத் பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தின் பணிப்பாளர் எம். நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வினை பள்ளிவாசல்கள் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தத. பிரதம அதிதியாக மத விவகார கலாச்சார பிரதியமைச்சர் அஷ்ஷேக் முனீர் முளப்பர் கலந்து கொண்டார்.
இதன்போது ஏனைய பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், உலமாக்கள், ஊர் ஜமாத்தின், திணைக்கள அதிகாரிகள் , பிரதியமைச்சரின் அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வின் விசேட மிஹ்ராஜ் உரையை அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் கொழும்பு மாவட்ட கிளையின் பிரதித் தலைவர் எம்.பி. அப்துல்லா பாயிஸ் (ரஸாதி) வழங்கினார் துஆ பிரார்த்தனையை மல்வானை ரக்ஸபானா ஜும்ஆ பள்ளி வாசலின் இமாம் மெளலவி அனீஸ் வழங்கினார்.
இதன்போது பள்ளிவாசல் தலைவர் பத்தால் மொஹமட் உள்ளிட்ட நம்பிக்கையாளர்களால் பிரதியமைச்சர் மற்றும் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.



(ஏ.எஸ்.எம்.ஜாவித், அஷ்ரப் .ஏ. சமத்)
