உலகம்

“காலங்கள் பேசும் காவியங்கள்” கவிதை நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது

கவிதைக்களம் கவிபாவைக் குழுமத்தின் சார்பாக, சென்னை புத்தகக் கண்காட்சியில் வசந்த பதிப்பக அரங்கு எண் 590 இல், தொகுப்பாசிரியர் கலைமாமணி கவிபாவை கார்த்திக் தொகுத்த 10000 கவிதைகள் கொண்ட “காலங்கள் பேசும் காவியங்கள்” என்ற 2024 ஆம் ஆண்டு வெளிவந்த நூல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலை, இந்திய சொட்டு நீர்ப்பாசனத்தின் தந்தை வேளான் வல்லுநர் அக்ரி ஜேம்ஸ் பிரடெரிக் பார்வையிட்டுப் பாராட்டினார்.

இதன்போது, முனைவர் மோ. பாட்டழகன், பாடலாசிரியர் அழகிரி பாண்டியன், எழுத்தாளர் சங்கமித்திரை ஆகியோரும் உடன் இருந்தனர்.

இப்புத்தகக் கண்காட்சியில், திராவிட முன்னேற்றக் கழக வர்த்தக அணியின் மாநிலத் தலைவர் கவிஞர் காசி முத்து மாணிக்கம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இவ்வரங்கில் பட்டயக் கணக்காளர் எழுத்தாளர் சொ. பாசுகரன் வெளியிட்ட “பெயர்த்திச் சிறுமி ஆதினி” உலக சாதனை நூலையும் மக்கள் ஆர்வத்தோடு பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

இந்த 49 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 8 ஆம் திகதி முதல் – 21 ஆம் திகதி வரை (14 நாட்கள்), சென்னை – நந்தனம் வை.எம்.சி.ஏ. (YMCA Grounds, Nandanam) மைதானத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *