வடமத்திய மாகாண பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் போர்ட்டுகள், கணினி இயந்திரங்கள் மடிக் கணினிகள் வழங்கும் நிகழ்வு..!
பிரதமரின் பணிக்குழுவும் கல்வி அமைச்சும் இணைந்து வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள் கோட்ட கல்வி அலுவலகங்களுக்கு கணினி இயந்திரங்கள் மற்றும் விஞ்ஞான பிரிவின் மேம்பாட்டு திட்டங்களுக்கு அந்த பாடங்களை கற்பிக்கும் பாடசாலைகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் அனுராதபுரம் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது 200 ஸ்மார்ட் போர்டுகள்,30 கணினிகள் மற்றும் 07 மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டன.கல்வியின் டிஜிட்டல் மாற்றத்தின் தொடக்கமாக பாடசாலைகளில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த பெறுமதி ஏழு மில்லியன் ஆகும்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)



