திருநெல்வேலி தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை நிகழ்த்திய பொங்கல் விழாவில் “பரப்பிரம்மம்” நூல் வெளியீடும் அறிமுக விழாவும்..!
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிக்குளம், திருநெல்வேலி தெஷண மாற நாடார் சங்கம் கல்லூரியில், (TDMNS ) தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை நிகழ்த்திய பொங்கல் விழாவில், நாகர்கோவிலைச் சார்ந்த இறையன்பன் அரவிந்தன் அவர்களின் “பரப்பிரம்மம்” என்ற நூல் வெளியீடு மற்றும் அறிமுக விழா நடைபெற்றது.
இவ்விழாவில் நூலின் பதிப்பாசிரியர் கவிதைக்களம் கவிபாவை குழுமம் நிறுவனர் ( இந்தியா- மலேசியா- சிங்கப்பூர் ) கலைமாமணி கவிபாவை கார்த்திக், நூலாசிரியருக்கு ” “பிரம்ம ஜோதி” மற்றும் “பரம புருஷ விருது” வழங்கி சிறப்பு செய்தார்கள்.
திருச்சி மாவட்டத்தின் முன்னாள் துணை ஆட்சியர் கவிஞர் பவேரா மணிவேலன், வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரியின் செயலர் மற்றும் முதல்வர் அவர்களுக்கு நூலாசிரியர் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
தீந்தமிழ் அமைப்பின் நிறுவனர் வழக்கறிஞர் நெல்லை அருள் நன்றியுரை வழங்கி நிறைவு செய்தார்கள்.
பார்வையாளர்களாக, TDMNS பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஜே.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், SAV சகாய தாய் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )




