புத்துயிர் பெறும் கற்பிட்டி பிரதேச வர்த்தக சங்கம்
கற்பிட்டி பிரதேசத்தில் வர்த்தக சங்கத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் முகமாக விஷேட கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை (16) இரவு கற்பிட்டி பஸார் ஜூம்ஆ பள்ளிவாசலில் வர்த்தக சங்கத்தின் தலைவர் எஸ். ஏ. எம். றியால்தீன் தலைமையில் இடம்பெற்றது.
கற்பிட்டி வர்த்தக சங்கத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி சக்திமிக்க சங்கமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்து.
இக் கலந்துரையாடலில் முதற் கட்ட நடவடிக்கையாக கற்பிட்டி நகரில் உள்ள சகல வர்த்தகர்களையும் சங்கத்தில் இணைத்து கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. மேலும் அந்த வேலைத்திட்டத்தை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து சகல அங்கத்தவர்களையும் ஒன்றிணைத்து கற்பிட்டி பிரதேசத்திற்கான வர்த்தக சம்மேளனம் ஒன்றை உருவாக்குவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
