கல்விச் சீர்திருத்த முன்னெடுப்புகளுக்கு நாம் எதிர்பல்ல, மாறாக கல்வியை ஆபாசமாக்கும் நடவடிக்கைக்களுக்கே நாம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறோம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
தரம் 1 தொடக்கம் 6 வரை கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு எந்த எதிர்ப்பையும் யாரும் காட்டவில்லை. கல்வியில் ஆபாசத்தை புகுத்தும் நடவடிக்கைக்கே நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம். கல்வியில் கட்டமைப்பு ரீதியிலான மாற்றத்தை முன்னெடுக்குமாறே வலியுறுத்தி வருகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ், வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி வைக்கும் மற்றுமொரு கட்டம் இன்று (17) முன்னெடுக்கப்பட்டன. இதன் பிரகாரம், கிதுல்கல பிரதேச வைத்தியசாலைக்கு 33 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதன் கீழ், CTG Machine 1 ம், Patient Monitor 2 ம், மற்றும் Baby Warmer 1 ம் இவ்வாறு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கம் பல வேடிக்கையான சம்பவங்களைச் செய்து வருகின்றது. கல்விச் சீர்திருத்தங்கள் முறையான கலந்துரையாடல்கள் இல்லாமல் முறைசாரா முறையில் முன்னெடுத்து வருகின்றது. Green paper, White paper களை முன்வைக்காமல் வெறுமனே power point presentation ஒன்றை மாத்திரம் முன்வைத்து இதனை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. கல்வி சீர்திருத்தப்பட வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சி பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வந்த சமயங்களில், தற்போதைய ஆளும் தரப்பினர் எம்மைப் பார்த்து கிண்டலாக சிரித்தனர். ஆங்கிலம், சீனம், ஜப்பான் மற்றும் இந்தி மொழிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து நாம் பேசிய சமயங்களில், தற்போதைய ஆளும் தரப்பு அமைச்சர்கள் எனக்கு கிண்டல் அடித்துப் பேசி, சேறு பூசும் நடவடிக்கைகளைச் செய்தனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி கல்வி சீர்திருத்தங்களுக்கு ஒருபோதும் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. கல்வியில் ஆபசத்தை புகுத்துவதற்கே நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம். இந்தப் பாடத்திட்டங்களைத் தயாரிப்பதற்கு பல கட்ட நடவடிக்கைகளைச் செய்யப்பட வேண்டியுள்ளன, ஆனால் இன்று அது எதுவும் முடிக்கப்படவில்லை. ஆகையால் இதில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. குறைபாடுகள், மீளாய்வுகள் முறையாக நிவர்த்தி செய்யப்பட்டிருந்தால், இந்த ஆபாச விடயங்கள் சேர்க்கப்பட்டிருக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்தவும், அவர்களின் வாழ்க்கையில் நலவை நாடவுமே வைத்தியசாலைகளுக்கு இவ்வாறு உபகரணங்களையும் மருந்துப் பொருட்களையும் வழங்கி வருகிறோம். இதுவரை காலமும் அரச அதிகாரத்துடனே நாட்டிற்கு ஏதாவது ஒரு வகையில் பெறுமானம் சேர்க்கப்பட்டு வந்தன. ஆனால் வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாம் நாட்டிற்கு பெறுமானம் சேர்க்கும் பணியை முன்னெடுத்து வருகிறோம். மக்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்காகவே இதனைச் செய்து வருகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.





