அசோக சபுமல் ரன்வல எம்.பியின் மனைவி விபத்தில் காயம்
முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல எம்.பியின் மனைவி டாக்டர் இந்திராணி ரன்வல செழுத்திச் சென்ற கார் இன்று அதிகாலை மற்றொரு காருடன் மோதியதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர்.
களனி-பியகம வீதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வீட்டிற்கு முன்னால் இந்த விபத்து நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்துக்கு காரணமான காரின் ஓட்டுநர், களுத்துறை வடக்கு, ஜாவத்தையைச் சேர்ந்த 30 வயதுடையவர். விபத்து தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டார். மேலும் அவர் மது அருந்தியிருப்பது பரிசோதனையின்போது உறுதி செய்யப்பட்டது என்று உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பியகம பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
