பால் தேநீரின் விலை குறைப்பு
பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விலையை இன்று (16) இரவு முதல் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டதன் காரணமாக பால் தேநீர் விலையையும் இவ்வாறு குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
