உள்நாடு

சாய்ந்தமருதுஅல்-ஹிலால் வளாகத்தை வெளிச்சமூட்டிய றிஸ்லி முஸ்தபாவுக்கு பாடசாலை சமூகம் நன்றி தெரிவிப்பு..!

சாய்ந்தமருது கமு / கமு/அல்-ஹிலால் வித்தியாலய வளாகத்தை வெளிச்சமூட்டுவதற்காக LED மின்குமிழ் தொகுதிகளை வழங்கிய மயோன் குழும தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான எம். றிஸ்லி முஸ்தபாவுக்கு பாடசாலை அதிபர் கே.எல். அப்துல் ஜௌபர் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

மயோன் குழும தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான எம். றிஸ்லி முஸ்தபா இன்று வெள்ளிக்கிழமை (16) காலை பாடசாலைக்குச் சென்று இந்த LED மின்குமிழ் தொகுதிகளை அதிபரிடம் கையளித்தார்.

பாடசாலை அதிபர் கே.எல். அப்துல் ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார், மயோன் குழும உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நியாஸ், எச்.எம். ஸிஹாப், பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.எச். லாபிர், ஏ.பி. ரோஷன் டிப்ராஸ், ஒழுக்காற்றுக்குப் பொறுப்பான ஆசிரியர் எம்.எஸ்.எஸ். ஷிப்லி, உதவி அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள், பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ச்சியாக பாடசாலைக்கு பல்வேறு உதவித் திட்டங்களைச் செய்து வரும் றிஸ்லி முஸ்தபாவுக்கு, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருமே தங்களது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *