எ.க. தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து பிரியாவிடை பெற்றுக்கொண்ட அமெரிக்கத் தூதர் ஜூலி சுங்..!
தனது இராஜதந்திர பதவிக் காலச் சேவை நிறைவடைந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐக்கிய அமெரிக்க குடியரசின் தூதுவர் ஜூலி சங் (Julie Chung), இன்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து கலந்துரையாடினார்.
அவரது பதவி காலத்தில், இரு நாடுகளின் உறவுகளை பல்வேறு துறைகள் ஊடாக வலுப்படுத்துவதற்கும், முன்னேற்றம் காணச் செய்வதற்கும், வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் எடுத்த முயற்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மிக அண்மைக் காலங்களில் இலங்கை எதிர்கொண்ட அசாதாரண துயர் சம்பவங்களின் போது இலங்கைக்கு மனிதாபிமான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அமெரிக்கா ஊடாக பெற்றுத் தந்த ஒத்துழைப்புகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
