உலகம்

தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்த இருவர் இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற போது கைது

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் நகைகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் கைதான இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் (47), அம்பாறை மாவட்டம் முகமது ஜெஸில் (45) ஆகியோர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக தப்பி வர முயன்ற நிலையில் கைதாகியுள்ளனர்.

அம்பாறை மற்றும் கொழும்பு மாவட்டங்களை சேர்ந்த இருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு தங்க நகைகளை கடத்தி வந்தனர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு , சில காலங்களுக்கு பிணையில் முன்னர் விடுவிக்கப்பட்டனர்.

ராமேஸ்வரம் மாவட்ட கியூ பிரிவு போலீசார் துறைமுக கடற்கரையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு செல்ல பதுங்கி இருந்த இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் (47), அம்பாறை மாவட்டம் முகமது ஜெஸில் (45) ஆகியோரை கைது செய்தனர்.

இருவரையும் கைது செய்த அதிகாரிகள் தங்கத்தைப் பறிமுதல் செய்தனா். பின்னர் இருவரையும் சென்னை ஆலந்தூர் கோர்ட்டில் முன்னிலைப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இருவரும் இலங்கைக்கு படகில் செல்ல திட்டமிட்டு ராமேசுவரம் வந்தனர். இங்கு படகுக்காக காத்திருந்த போது இருவரையும் க்யூ பிரிவு போலீஸாா் கைது செய்தனர். இவர்களை இலங்கை அழைத்து செல்ல ஏற்பாடு செய்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.

இவர்கள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சவுதியில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த வழக்கில் இரண்டு பேரும் சுங்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 2 மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியில் வந்தது குறிப்பிடத்தக்கது.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *