யாழ்ப்பாணம் கச்சதீவு கடல் பகுதியில் 237 பறவைகளை மூன்று நபர்களுடன் கைப்பற்றிய கடற்படை..!
யாழ்ப்பாணம், கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் புதன்கிழமை (14) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயன்ற இருநூற்று முப்பத்தேழு (237) பறவைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி (01) படகையும், மூன்று (03) சந்தேக நபர்களையும் கைப்பற்றிய கடற்படையினர்
வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தைச் சேர்ந்த கச்சத்தீவில் உள்ள கடற்படைப் பிரிவினால், தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணிக்கும் டிங்கிப் படகை அவதானித்தது, வடக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த ஒரு கடற்படைக் கப்பல் நடத்திய இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த டிங்கி படகால் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற இருநூற்று முப்பத்தேழு (237) புறாக்கள், மூன்று (03) சந்தேக நபர்கள் மற்றும் (01) டிங்கி ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 41 வயதுக்குட்பட்ட யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பறவைகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)


