உள்நாடு

“தை பிறந்தால் வழி பிறக்கும்.” இயற்கைக்கும், உயிரினங்களுக்கும் நன்றி செலுத்தும் உன்னத விழா தைப்பொங்கல்; பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் வாழ்த்து

தைப்பொங்கல் என்பது வெறும் ஒரு மத அனுஷ்டானம் மட்டுமல்ல, அது இயற்கைக்கும் உயிரினங்களுக்கும் நன்றியை வெளிப்படுத்தும் ஒரு உன்னத கலாசாரப் பண்டிகை என சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
“அறுவடை செழிக்க உதவிய சூரிய பகவானுக்கும், உழவுக்குத் துணைநின்ற கால்நடைகள் உள்ளிட்ட இயற்கைக்கும் நன்றி செலுத்துவதன் மூலம், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பிரிக்க முடியாத உறவு தைப்பொங்கலில் நன்கு வெளிப்படுத்தப்படுகிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது இந்து மக்களின் ஆழமான நம்பிக்கையாகும்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு என்ற வகையில், இந்நாட்டின் பல்லின சமூகங்கள் கொண்டுள்ள பெருமைமிக்க கலாசார உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாம் தொடர்ச்சியாக முன்னின்று உழைக்கின்றோம். தைப்பொங்கல் விழாவின் ஊடாகப் பிரதிபலிக்கும் கூட்டு முயற்சி, பகிர்ந்துகொள்ளல் மற்றும் சமத்துவம் போன்ற பண்புகள் எமது நாட்டின் தேசிய ஒற்றுமையை பலப்படுத்தப் பேருதவியாக அமையும்.

இன்று நாம் ஒரு நாடாக புதியதொரு பயணத்தை ஆரம்பித்துள்ள இத்தருணத்தில், விவசாயப் பெருமை மற்றும் தன்னிறைவு பொருளாதாரம் குறித்த எதிர்பார்ப்புகளை ஒளிரச் செய்யும் இத்தகைய விழாக்கள் மிகவும் காலோசிதமானவை.

“தை பிறந்தால் வழி பிறக்கும்” – இயற்கைக்கும் உயிரினங்களுக்கும் நன்றி செலுத்தும் உன்னத விழா தைப்பொங்கல்: பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் வாழ்த்து

தைப்பொங்கல் என்பது வெறும் ஒரு மத அனுஷ்டானம் மட்டுமல்ல, அது இயற்கைக்கும் உயிரினங்களுக்கும் நன்றியை வெளிப்படுத்தும் ஒரு உன்னத கலாசாரப் பண்டிகை என சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
“அறுவடை செழிக்க உதவிய சூரிய பகவானுக்கும், உழவுக்குத் துணைநின்ற கால்நடைகள் உள்ளிட்ட இயற்கைக்கும் நன்றி செலுத்துவதன் மூலம், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பிரிக்க முடியாத உறவு தைப்பொங்கலில் நன்கு வெளிப்படுத்தப்படுகிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது இந்து மக்களின் ஆழமான நம்பிக்கையாகும்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு என்ற வகையில், இந்நாட்டின் பல்லின சமூகங்கள் கொண்டுள்ள பெருமைமிக்க கலாசார உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாம் தொடர்ச்சியாக முன்னின்று உழைக்கின்றோம். தைப்பொங்கல் விழாவின் ஊடாகப் பிரதிபலிக்கும் கூட்டு முயற்சி, பகிர்ந்துகொள்ளல் மற்றும் சமத்துவம் போன்ற பண்புகள் எமது நாட்டின் தேசிய ஒற்றுமையை பலப்படுத்தப் பேருதவியாக அமையும்.

இன்று நாம் ஒரு நாடாக புதியதொரு பயணத்தை ஆரம்பித்துள்ள இத்தருணத்தில், விவசாயப் பெருமை மற்றும் தன்னிறைவு பொருளாதாரம் குறித்த எதிர்பார்ப்புகளை ஒளிரச் செய்யும் இத்தகைய விழாக்கள் மிகவும் காலோசிதமானவை.

அனைத்து வேறுபாடுகளையும் களைந்து ஒரே இலங்கையராக எழுந்து நிற்கவும், மிகவும் செழிப்பானதொரு எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவும் இத்தைப்பொங்கல் விழா நம் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக அமைகிறது.”
பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட முழு சமூகத்திற்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் சுபீட்சத்தின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறும் இனிய தைப்பொங்கல் தினமாக இத்தினம் அமையவேண்டுமென பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *