கஹட்டோவிட்ட பத்ரியா பரிசளிப்பு விழாவில் சாதனைகள் படைத்த ஆசிரியர்கள், மாணவர்கள் கெளரவிப்பு
கஹடோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 10ம் திகதி சனிக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில், பாடசாலையின் அதிபர் எம்.ஏ.எம்.எம். அஸ்மிர் தலைமையில் இடம்பெற்றது.
2024ம் ஆண்டில் பாடசாலையில் சாதனைகள் படைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதன் போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக கஹடோவிட்ட, அல் ஹிமா இஸ்லாமிய சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் நூறுள்ளா (நளீமி), பைன் குரூப் ஒப் கம்பனிஸ் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ஏ.எம். இக்ராம், அத்தனகல்லை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஆர்.எம். இன்சாப், அத்தனகல்லை பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.பி.ஜி. பிர்தௌஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



















