வெகு சிறப்பாக நடைபெற்ற அல் குர்ஆன் மனனப் பரிசளிப்பு நிகழ்வு
சவுதி அரேபிய தூதரகம் 3வது தடவையாகவும் தேசியமட்ட அல் குர்ஆன் மனனப்போட்டியை இலங்கையில் நடாத்தி அதன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான நினைவுச் சின்னம் மற்றும் பணப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கற்கிழமை (12) கொழும்பு ஐ.சி.ரி ரத்னதீப கோட்டலில் இடம்பெற்றது.
இலங்கைக்கான சவுதி அரேபிய தூதரகமும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து 4 பிரிவுகளாக ஏற்பாடு செய்த இறுதிப் போட்டியில் சுமார் 200 மாணவ மாணவிகள்
கலந்து கொண்டிருந்தனர்.
இப்போட்டிகளும் 4 பிரிவுகளாக நடாத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பேர் வீதம் 24 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு பெறுமதியான பணப்பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஆண், பெண் போட்டிகளில் முதல் இடம்பெற்ற இருவருக்கு தலா பத்து இலட்சம் ரூபா பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
அத்துடன் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கிலானியின் வழி நடத்தலில் இட்மபெற்ற இப்பொட்டிகளின் பரிசளிப்பு தூதரகத்தின் துணைத் தூதுவர் யாசிர் அல் ஹாஸிமி தலைமையில் இடம்பெற்றது.
தூதரகத்தின் கலாசாரப்பிரிவுப் பொறுப்பாளர் பத்ர் அல் அனர்ஜி, தூதரகத்தின் கணக்காளர் அக்கீல் அபூகூத் உள்ளிட்ட தூதரகத்தின் உயர் அதிகாரிகள், சமய விவகார பிரதியமைச்சர் முனீர் முழப்பர், பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள், இலங்கை;ககான வெளிநாட்டு தூதரகங்களின் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள், சமுக நல அமைப்புக்களின் பிரதிநிதிகள், உலமாக்கள் எனப்பலர் கலந்து சிறப்பித்தனர்.















(எஸ்.எம்.ஜாவித்)
