தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபன்ன நுழைவாயிலுக்கு இடையில் இன்று (13) காலை லொறியும் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
இவ் விபத்து காரணமாக, மாத்தறை நோக்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
