ஈரானின் பொருளாதாரத்தை வீழ்த்த டிரம்பின் புதிய வரி
ஈரானுடன் வர்த்தகத்தை மேற்கொள்ளும் நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது Truth Social சமூக வலைத்தளக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.
இந்த புதிய வரி விதிப்பானது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் போராட்டக்காரர்களைக் கொலை செய்தால், தான் இராணுவ ரீதியாக தலையிடப் போவதாக எச்சரித்ததைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த புதிய வரிகளை விதித்துள்ளார்.
