“அத்தீன் – ஹதீஸ் ஜிப்ரில் விளக்கம்” நூல் வெளியீடு
கொழும்பு இத்திஹாத் அஹ்லிஸ்ஸுன்னதி அமைப்பால் அரபுக் கல்லூரி உயர் வகுப்பு மாணவர்களுக்கு நடாத்திய கல்விக் கருத்தரங்குகளின் அரபு மொழி கையேடுகளின் தமிழாக்க நூல் எதிர்வரும் 18 ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு அக்ரபோல் உணவக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அரபு மொழியில் வழங்கப்பட்ட 10 கையேடுகளின் தமிழாக்கத்தை பன்னூலாசிரியரும் ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீட அதிபருமான மெளலவி அஸ்மிகான் அலியார் (முஅய்யிதி) செய்துள்ளார்.
இத்திஹாத் அஹ்லிஸ் ஸுன்னதியின் தலைவர் டாக்டர் பஹ்மி இஸ்மாயீலீன் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் மெளலவி அஹ்மத் ஷாஹ் (ஜமாலி) நூல் ஆய்வுரை வழங்கவுள்ளார்.
கலீபதுல் குலபா அல்ஹாஜ் முஹம்மத் ஸுஹூர் (பாரி) உட்பட கையேடுகளை தயாரித்த உஸ்தாத்மார்களும், 50க்கும் மேற்பட்ட ஸுன்னத் ஜமாத் அரபுக் கல்லூரி அதிபர்களும், இத்திஹாத் அஹ்லிஸ் ஸுன்னதி உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
(பேருவலை பீ. எம். முக்தார்)
