உள்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொலன்னறுவை வர்த்தகர்களுக்கு சீனன்கோட்டை மக்கள் நிதியுதவி..!

பேருவலை, சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்தின் வழிகாட்டலின் கீழ் செயற்படும் , சீனன்கோட்டை அனர்த்த முகாமைத்துவ கமிட்டி China Fort Disaster Management Committee (2026/01/11) திகதி சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளர் எம்.எம்.எம். சிஹாப் ஹாஜியார் தலமையில் பொலன்னறுவை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபை, பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் பொலன்னறுவை மாவட்ட பைத்துஸ்ஸக்காத் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து,

மன்னம்பிட்டிய , மானிக்கம்பிட்டிய, மஜீட்புரம் மற்றும் முஸ்லிம் கொலனி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 72 வியாபாரிகளை (கடைகள் மற்றும் சுய தொழில்களை) மீண்டும் ஆரம்பிக்க பண உதவிகளை வழங்கியது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் அவல நிலையினை மாவட்ட ஜம்இய்யா சீனன்கோட்டை அனர்த்த முகாமைத்துவ கமிட்டி China Fort Disaster Management Committee அமைப்பின் கவணத்திற்கு கொண்டுவந்த வேளை அவர்கள் இப்பிரதேசங்களை நேரடியாக பார்வையிட்டு முடியுமான உதவிகளை வழங்குவதாக வாக்களித்தமைக்கு அமைவாக அனைவருக்கும் காசோலைகள் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளர்களான கலீபதுஷ் ஷாதுலி அஷ்செய்க் இஹ்ஸானுதீன் அபுல் ஹஸன் (நளீமி) அல்ஹாஜ் அரூஸ் அனஸ், இணைப்பொருளாலர் அல்ஹாஜ் ஹில்மி மௌசூன், உறுப்பினர் அல்ஹாஜ் தஹ்லான் மன்ஸூர், சீனன்கோட்டை அனர்த்த முகாமைத்துவ கமிட்டி China Fort Disaster Management Committee உறுப்பினர் அல்ஹாஜ் ஹஸன் ஜமீல், சமூக சேவையாளர் அஷ்செய்க் அல்ஹாஜ் மக்கீ மன்ஸூர் (நளீமி) , முன்னாள் காதி நீதிபதி அல்ஹாஜ் மிர்சூக் பளீல், சமூக சேவையாளர் நபீஸ்தௌபீக் உட்பட மற்றும் பிரமுகர்கள் பொலன்னறுவை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபை, பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் பொலன்னறுவை மாவட்ட பைத்துஸ்ஸக்காத் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த உதவிகள் நிச்சயமாக உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களுக்கு ஆறுதலும் உந்து சக்தியுமாகும். உண்மையிலேயே இந்த ஏற்பாட்டினை செய்த ஏற்பாட்டுக்குழுவினருக்கும் ஆதரவளித்த அனைவருக்கும் பிரதேச மக்கள், ஜம்இய்யா , சம்மேளனம் மற்றும் பைத்துஸ்ஸக்கா மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

அல்லாஹ் அந்த மக்களின் வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் பறகத் செய்வானாக என்று அவர்கள் விடுத்துள்ள நன்றியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறான நல்ல மனதோடு வழங்கப்படும் இந்த உதவிகள் நிச்சயமாக பல மடங்காக அதிகரித்து இந்த மக்களின் வியாபாரத்தில் பறகத்தாக அமையும் என்றும்மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனன்கோட்டை அனர்த்த முகாமைத்துவ கமிட்டி China Fort Disaster Management Committee ஏற்கனவே அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓய பகுதிகளுக்கும் பல கோடி நிதியை வழங்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

(பேருவலை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *