மொழி, இனம், பண்பாடு சிதைந்து விட்டால் தமிழர் என்ற அடையாளத்தை இழந்து விடுவோம்; முதலமைச்சர் ஸ்டாலின்
மொழி சிதைந்தால்,இனம் சிதை யும், இனம் சிதைந்தால், நம்முடைய பண்பாடு சிதைந்துவிடும். பண்பாடு சிதைந்தால், நம்முடைய அடையாளம் போய்வி டும். அடையாளம் போய் விட்டால், தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி யையே இழந்துவிடுவோம் என்று அயலகத் அயலகத் தமிழர் தினம் நிகழ்வில் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை வர்த்தக மையத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து விருதுகளை வழங்கியதன் பின்னர் அவர் அங்கு உரையாற்றினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் அங்கு பேசுகையில் –
உலகின் பல நாடுகளி லும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும், தமிழர்களான நீங்களும், உங்களின் குடும்பத்தாரும், தொழில் நிமித்தம் வாழ்கின்றீர்கள். ஒவ்வொரும் பொறுப்புகளிலும், நல்ல நிலையிலும் இருப் பதை நினைத்து நான் பெரு மைப்படுகிறேன்,
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நீங்கள் எல்லோரும், உங் கள் சொந்தங்களை பார்க்க தமிழ் நாட்டிற்கு வருகிறீர்கள். நாம் அனைவரும் சொந்தங்கள்.தமிழின் சொந்தங்கள். இது பல்லாயிரம் ஆண்டு காலத்து சொந்தம்.
பல ஆண்டு தொடாராக இருக் கின்ற சொந்தம். நாடுகளும், கடல்களும் நம்மை பிரித்தாலும், மொழியும், இனமும் இணைக்கிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நீங்கள் அனைவரும் வந்திருக்கிறீர்கள். தமிழர் திருநாளாம் பொங்கல் நேரத்தில் இந்த மாபெரும் தமிழர் ஒன்று கூடக்கூடிய கடலை சிறப்பாக ஏற்பாடு செய் திருக்கிறீர்கள்.
ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அயல சுத் தமிழர் நலத் துறை அமைச்சர் நாசருக்கும். துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன்.
நாசரைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் கொஞ்சமாக சத்தமிடுவார். ஆனால் வேலை நடைபெறும். ஒரு வேலையை அவரிடத்தில் ஒப்படைத்தால், நாம் எதிர் பார்த்ததை விட சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்பதை இந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் கொடுத்த பேட்டியை பார்த்து, நாசர் தன்னுடைய பணியை சிறப்பாக செய்துவிட்டார் என்பது புலனாகிறது.
நூற்றாண்டுகளுக்கு முன் தங்களின் தாய்மண்ணான தமிழ்நாட்டில் இருந்து, பல்வேறு காரணங்களுக்காக பறந்து சென்றவர்கள் உங்கள் முன்னோர்கள் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இந்த நிகழ்வில் இலங்கையிலிருந்து பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநர்களான செந்தில் தொண்டமான், ஜீவன் தியாகராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இருந்து தமிழ் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலக்கியவாதிகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் என பெரும் எண்ணிக்கலானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






( சென்னையில் இருந்து இர்ஷாத் ரஹமதுல்லா)
