உள்நாடு

கஹட்டோவிட்டவில் இலவச கத்னா மற்றும் நூல் அறிமுக நிகழ்வுகள்..!

கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள Muslim Ladies Study Circle ஏற்பாடு செய்துள்ள நூல் வெளியீட்டு விழாவும் இலவச கத்னா வைபவமும் எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

காலையில் கத்னா வைபவமும் அதேதினம் மாலை 4 மணிக்கு நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

மௌலவியா கமரூன்நிஷா எழுதிய ‘தெவிட்டாத தேன் துளிகள்’ என்ற நூல் இவ்வைபவத்தின் போது வெளியிடப்படவுள்ளது.

முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் எம்.எம்.ஏ கபூர் இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதோடு முன்னாள் தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் அவர்கள் நூலாய்வு செய்வார்.

Muslim Ladies Study Circle தலைவரும் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் அல்ஹாஜ் எம்.இஷட் அஹமட் முனவ்வர் அவர்களின் தலைமையில் நடைபெறும்.

இச்சிறப்பு நிகழ்ச்சியில் கம்பஹா மாவட்ட அஹதியாவின் தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம் ஜுனைத் சிறைப்புரையாற்றுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *