இஹலபுளிபங்குளம் அந்நஹ்லாவில் புது மாணவர் சேர்ப்பு
அனுராதபுரம் இஹலப்புளியங்குளம் அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் 2026 ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நிகழ்வும் அஹதியா தேசிய இடை நிலை சான்றிதழ் பரீட்சை 2024 (2025) சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் அதிபர் தேசமான்ய எம்.ஆர்.எம்.ரனீஸ் மற்றும் தேசமான்ய பீ.ஜாயிஸ் (உஸ்வி) ஆகியோரின் தலைமையில் அந்நஹ்லா கல்வி மத்திய நிலையத்தில் (11) நடைபெற்றது.
இதன் போது அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் சகல மாணவர்களுக்கும் ஹக்மன் பவுண்டேஷன் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
2025 ஆம் ஆண்டின் இறுதித் தவணையில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்கள் பெறுபேற்றறிக்கைகள் விழாவின் போது வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் அஹதிய்யா பாடசாலைக்கு தொடர்ச்சியாக சமுகமளித்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு பிரதம அதிகமாக ஹக்மன் பவுண்டேஷன் ஸ்தாபகர் ஏ.எம்.ஹலீம் கலந்து சிறப்பித்தார்.





(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
