உள்நாடு

பெலந்த முஸ்லிம் வித்தியாலயத்தில் பழைய மாணவர் கிரிக்கெட் போட்டி..!

பெலந்த முஸ்லிம் வித்தியாலயத்தில் இரண்டு நாட்களாக நடந்த Legends Battle 2026 கிரிக்கெட் போட்டி நேற்றுடன் முடிவுற்றது.

பெலந்த முஸ்லிம் வித்தியாலத்தின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்களிடையேயான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். இந்த இரண்டு நாள் போட்டியின் சாம்பியன்ஷிப்பை 2007 ஆம் ஆண்டு அணியும், இரண்டாம் இடத்தை 2012 ஆம் ஆண்டு அணியும் வென்றன. பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்களிப்புகளைப் பெறுவதற்கும், நிதி வசதிகளை மேம்படுத்துவதற்கும் இந்தப் போட்டித் தொடர் நடத்தப்பட்டதோடு, இருபதுக்கும் மேற்பட்ட பழைய மாணவர் அணிகள் இரண்டு நாட்களுமாக போட்டியிட்டன.

இந்நிகழ்வில், களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பின்னகொட விதான, பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹசீப் மரிக்கார், பாலிந்தநுவர பிரதேச சபைத் தலைவர் சனத் ஜீவானந்த, பிரதேச மதகுருமார்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

(பேருவலை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *