மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூட் இமாட் அவர்களுடன் ஆதம்பாவா எம்.பி. சிநேகபூர்வ சந்திப்பு..!
இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூட் இமாட் அவர்களுடன் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா இன்று சிநேகபூர்வ சந்திப்பொன்றை கொழும்பு மெல்போர்ன் அவனியிலுள்ள உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலத்தில் மேற்கொண்டார்.
இச் சந்திப்பின் போது இருநாட்டு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதுடன் டித்வா பேரனர்த்தத்தின் போது மாலைதீவு நாட்டின் நிதிப்பங்களிப்புக்காக பாராளுமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்தார்.
இதன் போது வைத்தியரும் பிரபல தொழிலதிபருமான டாக்டர் றிஸான் ஜெமீல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ். இம்தியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
