ஒலுவில், பாலமுனை சமுர்த்தி வங்கியினால் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக “தூய்மையான நகரம் – ஆரோக்கியமான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில், பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனையின் பேரில் முன்னெடுக்கப்படும் பேரிடருக்குப் பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு மூன்று நாள் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக ஒலுவில் பாலமுனை சமூர்த்தி வங்கியினால் அதன் கட்டுப் பாட்டு சபைத் தவிசாளர் ஏ.எம்.பழீல் தலைமையில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் பாலமுனை பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் பிரகாரம் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் இனங்காணப்பட்டு சுத்தம் செய்யும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சமூர்த்தி வங்கி முகாமையாளர் ரி. கே. றஹ்மத்துல்லா , வங்கி கட்டுப் பாட்டு சபையின் உறுப்பினர்கள் மற்றும் வங்கி உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.



(இஸட். ஏ. றஹ்மான்- ஒலுவில் விசேட செய்தியாளர்)
