கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய மாணிக்க விழாவின் “தில்லை மலர்” நூல் வெளியீடு
கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்படும் மாணிக்க விழா சிறப்பு மலரான “தில்லை மலர்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2026 ஜனவரி 22 (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பாடசாலையில் அதிபர் எஸ். எம். அரூஸ் தலைமையில் நடைபெறவுள்ளது
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பேராதனை பல்கலைக்கழக முன்னாள் மெய்யியல் மற்றும் உளவியல் துறை விரிவுரையாளர் பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ் , கௌரவ அதிதியாக கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ஜவாத் , சிறப்பு அதிதிகளாக முன்னாள் புத்தளம் வலயத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளர் எம். ஏ. எம். எம். ஜவாத் மரைக்கார், முன்னாள் புத்தளம் வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் இஷட் .ஏ. சன்ஹீர் மற்றும் மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.ஏ.எம். நிலாம் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
கற்பிட்டி வரலாற்றில் ஒரு மைற்கல்லாக இடம்பெறும் இந் நூல் வெளியீட்டு விழாவுக்கு சகலரையும் கலந்து சிறப்பிக்குமாறு பாடசாலை கல்விச் சமூகம் அன்பாய் அழைக்கிறது.
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
