நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம்

சிபெட்கோ எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் திருத்தப்படுள்ளது .
ஒட்டோ டீசல் ரூ.2 ஆல் அதிகரித்து ரூ.279 ஆகவும், சூப்பர் டீசல் ரூ.5 ஆல் அதிகரித்து ரூ.323 ஆகவும், பெட்ரோல் ஒக்டேன் 95 ரூ.5 ஆல் அதிகரித்து ரூ.340 ஆகவும், மண்ணெண்ணெய் ரூ.2 ஆல் அதிகரித்து ரூ.182 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது .
பெட்ரோல் ஒக்டேன் 92 விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலைகளை திருத்துவதாக LIOC நிறுவனமும் தெரிவித்துள்ளது.
