உள்நாடு

சீனன் கோட்டை-பெருகமலை ஜும்ஆப் பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கான அடிக்கல் நடும் விழா


பேருவலை-சீனன் கோட்டை-பெருகமலை மஹ்லரத்துஷ் ஷாக்கிரீன் ஜும்ஆப் பள்ளி வாசல் விஸ்தரிப்புப் பணிகளுக்கான அடிக்கல் நடும் விழா விமர்சையாக நடைபெற்றது.
குறித்த பள்ளிவாசலில் மக்களின் தொழுகை மற்றும் ஏனைய வணக்க,வழிபாடுகளுக்கு நீண்ட காலமாக இட நெருக்கடி இருந்து வரும் நிலையில் பள்ளிவாசலோடு இணைந்திருந்த வீடு சில வருடங்களின் முன்னர் சீனன் கோட்டைப் பள்ளிச் சங்கத்தினால் வாங்கப் பட்டது.

பள்ளிச் சங்கத்தின் முயற்சியினால் ஊர்த் தனவந்தர்களின் உதவியோடு பள்ளிச் சங்கத்தின் வழிகாட்டலில் பெருகமலை மஹ்லருத்துஷ் ஷாக்கிரீன் பள்ளி வாசலின் முன்னாள் நிர்வாக சபைத் தலைவர் சிரேஷ்ட பிரமுகர் அல்ஹாஜ் ஐ.எல்.எம் தாஹா தலைமையில் பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கான அடிக்கல் நடும் வைபவம் விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சீனன் கோட்டைப் பள்ளிச் சங்க இணைச் செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.எம். சிஹாப், பொருளாளர் அல்ஹாஜ் ஹில்மி மவ்ஸூன், பள்ளிச் சங்க இணைச் செயலாளரும் கலீபத்துஷ் ஷாதுலியுமான அல்ஹாஜ் அஷசேக் இஹ்ஸானுத்தீன் (நளீமி), பள்ளிச் சங்க உறுப்பின அல்ஹாஜ் இஸ்ஸத் ஸவாஹிர் பெருகமலைப் பள்ளிவாசல் இமாம்களான மெளலவி எஸ்.எச்.எம். இம்ரான், (ஹமைதி), மெளலவி முஹம்மத் யூஸுப் (அலீயி) கலீபத்துச் ஷாதுலி அல்ஹாஜ்மௌவலி ஸைனுல் ஆப்தீன், (பஹ்ஜி) சீனன் கோட்டைப் ஜும்ஆப் பள்ளி வாசல்கள் கதீப் மெளலவி அல்ஹாஜ் எம்.எஸ்.எம். பாஸில் (அஷ்ரபி) அஷ்சேக் அல்ஹாஜ் மக்கி மன்ஸூர் (நளீமி) உற்பட இன்னும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

சீனன் கோட்டைப் ஜும்ஆப் பள்ளி வாசல்கள் கதீப் மெளலவி அல்ஹாஜ் எம்.எஸ்.எம். பாஸில் (அஷ்ரபி) விசேட
பேச்சாளராக கலந்துகொண்டு பள்ளிவாசல் அமை ப்பதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி எடுத்துக் கூறினார். அட்டிக்கல் நட்டிய பின்னர் துஆப் பிரார்த்தனையை கலீபத்துஷ் ஷாதுலி அல்ஹாஜ் ஸைனுல் ஆப்தீன் (பஹ்ஜி) நடாத்தி வைத்தார்.

(பேருநலை பீ.எம்.முக்த்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *