கற்பிட்டியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ (YMMA)பேரவையின் கற்பிட்டிக் கிளையின் ஏற்பாட்டில், “க்ளோபல் ஹியுமனிடேரியன் சொசைட்டி” இன் நிதி ஒதுக்கீட்டில் கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் எஸ் எச் எம் முஸம்மில் தலைமையில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை (03) கற்பிட்டி மஸ்ஜிதுல் ரஹ்மான் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இவ் இலவச மருத்துவ முகாமில் உடல் நல பரிசோதனைகள், அடிப்படை மருத்துவ பரிசோதனைகள், தொற்று நோய்கள் மற்றும் ஏனைய நோய்களுக்கான மருத்துவ ஆலோசனைகள், குழந்தைகள் சுகாதார பராமரிப்பு மற்றும் விட்டமின் விநியோகம் இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
