இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் புத்தளத்தில் சேர்ந்த இருவருக்கு பட்டம்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புத்தாண்டு தினமாகிய வியாழக்கிழமை (01) கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) வெகு விமர்சையாக நடைபெற்றது
இவ்விழாவில் கல்வி பீடத்தின் , Master of Teacher Educator பாடநெறியினை பூர்த்தி செய்தமைக்கான பட்டச்சான்றிதழ்களை புத்தளத்தை சேர்ந்த கரிக்கட்டை எக்ஸ்ஸலண்ஸ் ஆங்கில பாடசாலையின் கல்வி அபிவிருத்தி அதிகாரி திருமதி றிஸ்கியா மற்றும் புத்தளம் பாத்திமா பெண்கள் மகா வித்தியாலய அதிபர் திருமதி சரினா பர்வின் ஆகிய இருவரும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
