கற்பிட்டி டித்வா பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்டபிரதேச செயலாளர் பிரியதர்ஷினி..!
டித்வா சூறாவளி மற்றும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் அண்மையில் பாதிப்புக்குள்ளாகின.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பெரியகுடியிருப்பு , புதுக்குடியிருப்பு, சின்னக்குடியிருப்பு, மண்டலக்குடா, ஆனவாசல் மற்றும் வன்னிமுந்தல் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (28) விஜயம் செய்த கற்பிட்டி பிரதேச செயலாளர், எஸ்.என் பிரியதர்ஷினி சேதமடைந்துள்ள வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு சேத விபரங்களை ஆய்வு செய்தார்.
அத்தோடு தனது வாழ்வாதாரத்திற்கு என்று இருந்த ஒரே வீடான தகரம், கிடுகு, மரக் கம்புகளினால் ஆன வீடுகளின் பாதிப்புக்களை நேரடியாக பார்வையிட்டதுடன் அவர்களுககான அவசர கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்வதற்கும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
மேற்படி நேரடி விஜயத்தின் போது அனர்த்த பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் , அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
