கவிஞர் ரஷீத் எம். றியாழுக்கு “செந்தமிழ் வித்தகர்” விருது
கவிஞரும் பத்திரிகையாளரும் தமிழ் எழுத்தணிக் கலைஞருமான ரஷீத் எம். றியாழ் “செந்தமிழ் வித்தகர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கண்டியை ஆண்ட ஸ்ரீ விக்ரமராஜசிங்க மன்னனின் 7 வது தலைமுறை வாரிசு பேரனும் சமூக செயற்பாட்டாளருமான இந்தியா மதுரையைச் சேர்ந்த அசோக் ராஜாவினால் இந்த விருதும் சான்றிதழும் கவிஞர் ரஷீத் எம் றியாழுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
அண்மையில் ஹொரணையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு இந்திய மணிமகுடம் இதழின் ஆசிரியரும் புதிய வானம் ஊடக வலையமைப்பின். தலைவருமான மணி ஸ்ரீகாந்தன் தலைமை வகித்தார்.
கவிஞர் றியாழ் தினகரன் வாரஞ்சரியில் சுமார் 11வருடங்களாக “கவிதைப்பூங்கா” பகுதி பொறுப்பாசிரியராகவும், இலங்கை வானொலி மலையக சேவையில் சுமார் 5 வருட காலம் “வசந்த வாசல்” கவிதா நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் பங்களிப்பாற்றியவராவார்.
இந்திய தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் இயங்கி வருகின்ற புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளை சார்பிலேயே இவருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கவிஞர்கள் கலைஞர்கள் உட்பட உள்நாட்டைச் சேர்ந்த கவிஞர்கள் கலைஞர்கள் சமூக சேவையாளர்கள் பலரும் கலந்து கொண்ட இவ்விழாவை புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளையின் நிறுவனர் தனலட்சுமி மாதவன் நெறிப்படுத்தியிருந்தார்.
