அடுத்த ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு எதிர்வரும் பெப்ரவரியில் ஆரம்பம்
2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் பெப்ரவரி 01ஆம் திகதி தொடங்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிதாகச் சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட ‘A’ மற்றும் ‘Aa’ பட்டியல்களைப் புதுப்பிப்பது தொடர்பான வீடுகளுக்கு மட்டுமே இம்முறை கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் வருகை தருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டிய வீடுகளுக்கு மட்டுமே உத்தியோகத்தர்கள் செல்வார்கள் எனவும் கூறப்படுகிறது.
தகவல்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் ஒருவர் வாக்காளராகப் பதிவு செய்யத் தகுதியானவரா இல்லையா என்பது தொடர்பில் உத்தியோகத்தர்களின் பரிந்துரைகளையும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கண்காணிக்க முடியும்.
ஏதேனும் முறைகேடுகள் நடந்தால், பிரதிநிதிகள் அது குறித்து கணக்கெடுப்பு உத்தியோகத்தருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்க முடியும் என்றும், அத்தகைய அறிவிப்பின் பிரதியொன்றை சம்பந்தப்பட்ட மாவட்ட பிரதி அல்லது உதவித் தேர்தல் ஆணையாளருக்கு உடனடியாக அனுப்ப முடியும் என்றும் பெப்ரல் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
