உள்நாடு

கற்பிட்டியில் டித்வா வினால் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டபிரதேச செயலாளர் பிரியதர்ஷினி

டித்வா சூறாவளி மற்றும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் அண்மையில் பாதிப்புக்குள்ளாகின.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு புதன்கிழமை (24) விஜயம் செய்த கற்பிட்டி பிரதேச செயலாளர், எஸ்.என் பிரியதர்ஷினி சேதமடைந்துள்ள வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு சேத விபரங்களை ஆய்வு செய்தார்.

இதன்போது முதற்கட்டமாக சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கண்காணிக்கப்பட்ட நிலையில், ஏனைய பிரிவுகளிலும் சேதமடைந்த வீடுகளை பார்வையிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேற்படி நேரடி விஜயத்தின் போது அனர்த்த பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கிராம உத்தியோகத்தரும் கலந்து கொண்டார். அத்தோடு பாதிக்கப்பட்ட நிலையில் தவித்துக் ஆஆகொண்டிருந்த ஒரு தாயின் வாழ்வாதாரத்தை சீரமைத்து, அவர் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *