புத்தளத்தில் கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்தியது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் கைது..!
கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் வார்த்தைகளால் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் வெள்ளிக்கிழமை (26) காலை முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பிரதேச சபையின் மங்களஎலிய தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தித் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி தான் அனர்த்த நிவாரணக் கடமை நிமித்தம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளையிலும் மற்றும் கடந்த 08 ம் திகதி அனர்த்தம் தொடர்பான கூட்டம் நிறைவடைந்த பின்னரும் குறித்த உறுப்பினர் இரு சந்தர்ப்பங்களிலும் தன்னை அச்சுறுத்தும் வகைபில் திட்டியதாக கிராம உத்தியோகத்தர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்
இது குறித்து தான் முந்தல் பிரதேச செயலாளருக்குத் தெரியப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், குறித்த உறுப்பினர் இன்று காலை முந்தல் பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகம் நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
