அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு ஜம்இய்யத்துச் ஷபாப் உதவி..!
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கம்பளை மற்றும் கிண்ணியா பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு ஜம்இய்யத்துச் ஷபாப் நிறுவனத்தினால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. கிண்ணியாவில் பாதிக்கப்பட்டோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர் அப்துல் கனி, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பெர்ணான்டோ, ஜம்இய்யத்துச் ஷபாப் பணிப்பாளர் மெளலவி எம்.எஸ்.எம்.தாஸீம்,பிரதிப் பணிப்பாளர் ஏ.ஜே.எம்.வாரித் ஆகியோர் பங்கேற்றிருப்பதைப் படங்களில் காணலாம்.



