Thursday, December 25, 2025
உள்நாடு

மேட் இன் ஸ்ரீலங்கா விருது பெற்ற ரீ அரிசி ஆலை உரிமையாளரை கெளரவித்த ஓட்டமாவடி பிரதேச செயலாளர்..!

தொழில் முயற்சி அதிகார சபையின் ஏற்பாட்டில் தேசியத்திற்கும் சர்வதேசத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வியாபார, தொழில் முயற்சியாளர்களைக்கௌரவித்து ஊக்கமடையச்செய்யும் நோக்கில் பல நிறுவனங்கள்
கௌரவிக்கப்பட்டன.

கடந்த 19.12.2025ம் திகதி கொழும்பில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற
வியாபார தொழில் முயற்சியாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு கௌரவத்தினை வழங்கியிருந்தார்.

இதில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ரீ ஸ்டார் அரிசி ஆலை உரிமையாளர் எச்.எம்.முஹம்மட் பாறுக் தனது அரிசி உற்பத்திக்காக மேட் இன் ஸ்ரீலங்கா விருதினைப் பெற்றுக் கொண்டார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து இவ்விருதினைப் பெற்றுக்கொண்ட ஹச்சி முஹம்மட் பாறுக் அவர்களைக் கௌரவிக்குமுகமாக இன்று (22) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் ஏ தாஹிர் தலைமையில் பிரதேச செயலக ஊழியர்களுக்காக இடம்பெறும் வாராந்த காலை ஆராதனையின் போது உத்தியோகத்தர்கள் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டார்.

இவ்விருது தொடர்பில் ஹச்சி முஹம்மட் பாறூக் கருத்துத்தெரிவிக்கையில், எனது 28 வருட தொழில் முயற்சிக்காக கௌரவிக்கப்பட்டமைக்கு மிக மகிழ்ச்சியடைந்தேன்.

இதில், என் மரியாதைக்கும் அன்பிற்குமுரிய கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ. தாஹிர் அவர்களின் முயற்சியும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம்.சுஹைர், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.யூ.ஹப்ஸா, ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர் எம்.பி.யூ.ஹபீபா போன்றோரின் வழிகாட்டலும் மிகவும் போற்றத்தக்கது எனத்தெரிவித்தார்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *