வரலாறு படைத்த தங்க விலை..!
உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ள நிலையில், இலங்கையிலும் நேற்று (24) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,500 அமெரிக்க டொலர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு தங்கச் சந்தையில் நேற்று (24) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கப் பவுன் (8 கிராம்) ஒன்றின் விலை நேற்று ரூ. 354,000 ஆகப் பதிவாகியுள்ளது. நேற்று முன் தினம் (23) இதன் விலை ரூ. 352,000 ஆகக் காணப்பட்டது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் நேற்று ரூ. 2,000 அதிகரித்துள்ளது.
அதேபோல, 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை நேற்று ரூ. 327,500 ஆக பதிவாகியுள்ளது. நேற்று முன் தினம் இதன் விலை சுமார் ரூ. 325,600 ஆகக் காணப்பட்டது. இதுவும் முந்தைய தினத்துடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பைக் காட்டுகிறது.
